|
12, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ந்தேதி தொடங்கி 27ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும்.
SSLC PUBLIC EXAM 2013 DATES
27.03.2013 - Tamil Paper 1 28.03.2013 - Tamil Paper 2 01.04.2013 - English Paper 1 02.04.2013 - English Paper 2 05.04.2013 - Maths 08.04.2013 -Science 12.04.2013 - Social Science |
|
|
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதஉள்ளனர். பத்தாம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.
|
CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - NOV 2012 RESULTS
|
பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் தலைமையில் 08.01.2013 அன்று அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் பணி இலக்குகள் மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது
|
தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசுப் பள்ளிகளில் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளில் சேர்க்க மற்றும் சேர்க்கையை அதிகப்படுத்த" - தமிழகம் முழுவதும் சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம், பேரணி மற்றும் விழா நடத்த தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு.
|
பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு விரைவில் தேர்வு முடிவு வெளியாகும்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் மொத்தம் 465 பேர் தேர்வு எழுதினர்.
அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மாணவர்களின் கல்வி தரத்தை பொறுத்து, உயர்கல்வி வரை இந்த உதவி தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டுக்கான, மாணவர்கள் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. கடந்தாண்டு, ஏழாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பள்ளி வாரியாக தேர்வு செய்யப்பட்டனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தேர்வு நடந்தது.
மொத்தம் 540 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆண்கள் பள்ளியில், பதிவு செய்த 240 பேரில், 205 பேர் தேர்வு எழுதினர். பெண்கள் பள்ளியில், பதிவு செய்த 271 பேரில், 260 பேர் தேர்வு எழுதினர். மாணவர்களுக்கு, பாடம் மற்றும் பொது அறிவு சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் குறித்த விபரம் அரசு சார்பில் வெளியிடப்படும்.
மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இன்று (நேற்று) நடந்த தேர்வில், மொத்தம் 465 பேர் தேர்வு எழுதினர். 45 பேர் தேர்வுக்கு வரவில்லை. இத்தேர்வில், தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படும். விரைவில், இத்தேர்வு முடிவு வெளியாகும்,&'&' என்றார்.
|
நேர்முக தேர்வு நடத்தியவர்களின் பெயரை வெளியிட முடியாது - உச்சநீதிமன்றம் உத்தரவு.
அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம் பெறும் நபர்களின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில், போலீஸ் துறையின், தடயவியல் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். "இந்த ஆட்கள் தேர்வின் போது, நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும்" என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, பாட்னா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, "நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, பீகார் மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்வதேந்தர் குமார், எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிறப்பித்த உத்தரவு:
அரசுப் பணிகளுக்காக நேர்முகத் தேர்வு நடத்துவோரின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோர முடியாது. அவ்வாறு பெயர்களை வெளியிட்டால், அந்த நேர்முகத் தேர்வுக் குழுவில் உள்ளவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்வதற்கான, ஒரு வழிமுறை என்றாலும், அதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சில வரையறைகள் உள்ளன. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பாட்னா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை, தள்ளுபடி செய்தனர். |
அரசு கல்லூரி துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைப்பு
அரசு கல்லூரிகளில், தூய்மை பணி மேற்கொள்ள, தனியார்களை பயன்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக, சென்னை கல்லூரிகளில், இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அரசு கல்லூரிகளில், 10 ஆண்டுகளாக, அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்படாததால், துப்புரவு செய்ய ஆளில்லாமல், கல்லூரி வளாகங்களில் குப்பைகள் அதிகமாக கிடக்கிறது. காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை, அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள அரசு உத்தரவிட்டது.
மேலும், கல்லூரியின் தேவைக்கேற்ப, துப்புரவு பணியாளர்களை நியமித்து கொள்ளலாம் என அறிவுறுத்தியது. கல்லூரி நிதி, பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியிலிருந்து, இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இதனால், கல்லூரி நிதி முழுவதும், பெரும்பாலும் பணியாளர் சம்பளத்திற்கே செலவானது.
பல கல்லூரிகள், புதிதாக யாரையும் நியமிக்காமல், இருக்கும் பணியாளர்களை கொண்டே, துப்புரவு பணிகளை மேற்கொண்டன.சில கல்லூரிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, தினசரி சம்பளம் என்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள், பணிக்கு வர ஆரம்பித்தனர். இதனால், தூய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து "தினமலர்" நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தனியார் மூலம், தூய்மை பணியை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. டெண்டர் மூலமாக, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு, தூய்மை பணியை அரசு கொடுத்துள்ளது. இதற்காக, ஒரு கல்லூரிக்கு, மாதம் ஒன்றுக்கு, 22 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்குகிறது.
முதல் கட்டமாக, சென்னையில் உள்ள பாரதி, காயிதே மில்லத், நந்தனம், அம்பேத்கர், ராணிமேரி மற்றும் மாநில கல்லூரி, அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றில், துப்புரவு பணிகளை, தனியார் மேற்கொள்ள உள்ளனர்.
வளாகத் தூய்மை, கழிவறை தூய்மை பணி, தோட்டப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ள, ஒரு கல்லூரிக்கு, ஐந்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிகளில் ஏற்கனவே பணியிலிருக்கும், துப்புரவு பணியாளர்களோடு இணைந்து, இவர்கள் பணியை மேற்கொள்வர்.
இத்திட்டத்தில், போதிய பயன் கிடைக்கும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளிலும், தூய்மை பணிகள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர், செந்தமிழ் செல்வி கூறுகையில், "தூய்மை பணிகளை மேற்கொள்ளும், தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன; நிதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள், இத்திட்டம் அமல்படுத்தப்படும்,&'&' என்றார்.
|
Upper Primary CRC 05.01.2012 - Art and Craft Module
|
ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை
நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2010-11, 2011-12 ஆகிய கல்வியாண்டுகளில் பயின்ற மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 481 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்குத் தலைமையேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார்.
விழாவில் சிதான்சு எஸ்.ஜெனா ஆற்றிய உரை:
மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கு நெறி சார்ந்த கல்வி மிகவும் அவசியம். மனித உரிமைகள், நல்லிணக்கமாக வாழ்வது, அமைதியை விரும்புவது, ஜனநாயக மரபுகள், பிறருக்காக உதவுவது ஆகிய பண்புகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில், ஆசிரியர் கல்வியில் உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
இப்போதைய கல்விமுறை தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிடம் முழுமையாக சரணடைந்துள்ளது. மனித பண்புகளுக்கோ, மற்றவர்களை மதிப்பதற்கோ கல்வி முறை முக்கியத்துவம் வழங்குவதில்லை. நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக முழுமையான புரிதலையோ, அறிவையோ இன்றைய கல்வி முறை வழங்கவில்லை.
மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையைத்தான் கல்வி நிறுவனங்கள் வளர்க்கின்றன. இணைந்து செயல்படுவது என்ற பண்பு மாணவர்களிடம் மறைந்துவருகிறது.
மாணவர்கள் பல சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களிடம் மனிதநேயம் குறைந்துவருகிறது.
எனவே, மனித மதிப்பீடுகள், நெறிசார்ந்த கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது மிகுந்த அவசியமாகிறது. இயற்கையை ரசிக்கவும், மனித உறவுகளை மதிக்கவும், கலைகளைப் படைக்கவும், பிறருக்காக இரங்கும் மனப்பான்மையையும் மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் ஆசிரியர் கல்வி இருக்க வேண்டும்.
கல்வி சார்ந்த சில குறிப்புகளையோ, ஆய்வுகளையோ மட்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்காமல் உலகமயமாக்கல், அமைதி, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம் குறித்து ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள தனித்தன்மையை அறிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும். கற்பித்தலுக்கான புதிய வழிமுறைகளையும், சூழல்களையும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் சிதான்சு எஸ்.ஜெனா.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் பி.பழனியப்பன், துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன், உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். |
No comments:
Post a Comment