அனைவருக்கும் கல்வி இயக்கம் -பள்ளி வளர்ச்சி திட்டம் (SCHOOL DEVELOPMENT PLAN) தயார் செய்யப்பட்டு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் வைக்க இயக்குனர் உத்தரவு.
|
ஓய்வூதிய திட்ட நிதியில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார் : தணிக்கையும் இல்லை; கணக்கும் இல்லை
|
GROUP-IV Services, 2007 - 08 to 2012 -13 (Date of Written Examination:07.07.2012) COUNSELLING SCHEDULE TYPIST
|
வீட்டு பாடங்களால் பலனில்லை: அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்லண்டன்: மாணவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்வதால், அவர்களுக்கு பெரிதாக பலன் ஏதும் ஏற்பட போவதில்லை என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின், விர்ஜினியா பல்கலை கழக ஆராய்ச்சியாளர், பத்தாம் வகுப்பு படிக்கும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொண்டனர். வீட்டு பாடம் (ஹோம் ஒர்க்) செய்யும் மாணவர்களின் திறனை இவர்கள் சோதித்து பார்த்தனர்.
இந்த ஆய்வின் மூலம், "வீட்டு பாடத்தால், மாணவர்களுக்கு பெரிய பலன் ஏதும் ஏற்படவில்லை&' என்பதை இவர்கள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வு குழுவின் தலைவர் ராபர்ட் கூறியதாவது: கணக்கு பாடத்தை தவிர, மற்ற பாடங்களை, ஹோம் ஒர்க் செய்வதில் மாணவர்களின் திறன் வளர்ந்ததாக தெரியவில்லை. வீட்டு பாடத்தால் மாணவர்கள், பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். மற்றபடி பெரிய சாதனை செய்ய இந்த, "ஹோம் ஒர்க்&' துணை புரியவில்லை. சொல்லப் போனால், வீட்டு பாடங்கள், மாணவர்களின் மனதை நோகடிக்கிறது.இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்.
|
155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி
புதுடில்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு, 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்.
60 இடங்களில், பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுவதில், தனியாருடன் இணைந்து செயல்படலாம் என, இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும், அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தனியாருடன் இணைந்து, கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது. பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கே.வி., பள்ளிகளுக்கு, இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம். இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார். |
குரூப்-1 முதனிலைத் தேர்வு தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதிக்குப் பதில் ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர்,மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24 ஆகவும் வரும் ஜனவரி 27ம் தேதி தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
|
TNPSC -VAO - 2012 -2013 -தேர்வு முடிவு வெளியீடு
|
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் - DEC -2012- தேர்வு அட்டவணை வெளியீடு
|
உலக AIDS தின உறுதிமொழி !
|
No comments:
Post a Comment