PALLI.IN

Image description

Get Involved!

Image description

Students from rural background also involve in creative activities in the processof learning one example is this thumb impression drawing done by student of class four,

If the teacher foster the skills of them definitely they shine like stars

Image description
Image description
Image description

Learninging together is Awesome!

We learn together in group works than by teachers lecture teachers facilitate us for learning effectively.



Image description
Image description
Image description
Image description

Participate!

We use the available materials for creating creative projects like this We use to make FA projects for all the lessons and our teachers evaluate this for improvement in our learning.

FA also helps us to face SA confidently.

Image description
Image description
Image description

Wednesday, December 19, 2012


NMMS-Exam Model Question Paper

28.12.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்கக்கத்தில் ஆய்வுக்கூட்டம்


      மாணவர்களுக்கான விலையில்லா நோட்டு, புத்தகம், சீருடை ETC, பொருட்களின் விநியோகம், புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல் , தரம் உயர்த்துதல் விவரம், பள்ளி/ அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிட விவரம், ஆசிரியர்/ அலுவலர் ஓய்வு பெறுவோர் விவரம், புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரம், குடிநீர், கூடுதல் பணியிடங்கள் பயன்படுத்தப்பட்ட விவரம், கழிவறை இல்லாத பள்ளிகள் விவரம் போன்ற விவரங்கள் சார்ந்து 28.12.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் ஆய்வு நடைபெற இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
பி.எட்., ஆசிரியர் நியமனம்: 2வது இடத்திற்கு வந்த தமிழ்

பி.எட்., ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு 2ம் இடம் ஒதுக்கியதால், தமிழ் பாட ஆசிரியர்கள் நியமனம் அதிகரித்துள்ளது. இந்த புதிய உத்தரவால், தமிழ் பாடங்களுக்கு காலியாக உள்ள 2,080 ஆசிரியர் பணியிடங்களில், 1,550 தமிழ் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

      தமிழகத்தில், அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 360 மாணவர்களுக்கு, ஒரு கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அறிவியல், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், தமிழ் என்ற வரிசைப்படி, பி.எட்., ஆசிரியர்களை நியமித்தனர். 

இந்த நடைமுறைக்கு, தமிழாசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, டி.இ.டி.,தேர்வில், 360 மாணவர்களுக்கு மேற்பட்ட பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் வரிசையில், இரண்டாவது தமிழ் பி.எட்., ஆசிரியர்களை நியமிக்கலாம் என அரசு உத்தரவிட்டது. 2வது இடத்தில் இருந்த ஆங்கில பாடம் கடைசி நிலைக்கு சென்றது.
தமிழ் ஆசிரியர் கழக மாநில நிர்வாகி இளங்கோவன் கூறுகையில், "அரசின் இந்த புதிய உத்தரவால், தமிழ் பாடங்களுக்கு காலியாக உள்ள 2,080 ஆசிரியர் பணியிடங்களில், 1,550 தமிழ் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது," என்றார்.
 
அரசு பொது தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க, தேர்வுத்துறை வெளியிட்டுள்ள, "ஆன்-லைன்' பட்டியலில், மாணவரின் விவரங்களை சரி பார்த்து, அந்தந்த தலைமையாசிரியரே திருத்தம் செய்து கொள்ள, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


அரசு பொது தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க, தேர்வுத்துறை வெளியிட்டுள்ள, "ஆன்-லைன்' பட்டியலில், மாணவரின் விவரங்களை சரி பார்த்து, அந்தந்த தலைமையாசிரியரே திருத்தம் செய்து கொள்ள, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தேர்வுத்துறை கூறியிருப்பதாவது: தேர்வு எழுதுபவரின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, தேர்வு எழுதும் மொழி ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மாணவரின் புகைப்படம், மாறாமல் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுதுவோரின் குரூப் எண், பாட எண் வரிசையாக உள்ளதா என்பதை, தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும்.
இதில் தவறு இருப்பின், ஆன்- லைனில் வெளியிடப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். மையத்தின் பெயர், எண் மற்றும் பள்ளி எண் ஆகிய மூன்றில், எவ்விதமான திருத்தங்களை செய்ய கூடாது. இதன் மூலம், மாணவர்களுக்கு தவறில்லா மதிப்பெண் பட்டியல் வழங்க முடியும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு, காலியாகும் அரசு பணியிடங்கள் - முறையான ஊழியர் நியமனம் நடக்குமா?

 தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.

        தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

2001 முதல் 2005 வரை அதிகரிப்பு
கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.

இந்திய தலைமை கணக்காய்வு நிறுவனத்தின், தமிழக பிரிவில், பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அலுவலகத்தின் சார்பில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் ஆணை எண் வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் கடந்த, 1993ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆண்டுதோறும், 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.

2011ல் 40 ஆயிரம் பேர் ஓய்வு
இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த, 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசின் நலத் திட்டங்கள், சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால், அதற்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களின் பணிகள் என்னென்ன என்பதுஉள்ளிட்ட, பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரசுத்துறைகளில், புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த நடைமுறை, 1991ம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு துறைக்கும், தோராயமாகவே ஆட்களை நியமனம் செய்கின்றனர்.

ஊழியர்களுக்கு பணி சுமை
அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது. மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.

அதில், "தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது. எனவே மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு போதிய அளவில் நிதி வழங்க முடியாது. எனவே தங்களது சொந்த நிதியில் இருந்தே செலவினங்களை தமிழக அரசு கவனித்து கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தது. மேலும், "ஓய்வு பெறும் அரசு ஊழியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் புதியதாக ஆட்களை நியமனம் செய்யலாம். இதனால் அரசுக்கும் செலவினங்கள் குறையும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமை நிலைய செயலர் சீனிவாசனிடம் கேட்டபோது, "நிதி நிலையை காரணம் காட்டி, அரசுப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில் கவனம்செலுத்தும் அரசு, மற்ற அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

ஓய்வுக்கு பிறகும் வேலை
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.

மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.
 
கல்வித்தரத்தினை மேம்படுத்த 1 முதல் 8 வகுப்பு வரை கணினி வழிக்கல்வியினை செயல்படுத்த பாட சம்பந்தமான E-Content தயாரிக்க பள்ளி/கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் கணினி ஆர்முள்ளவர்களுக்கு போட்டிகளை நடத்த வழிமுறைகள் வெளியிட்டு SSA மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

2013-14 ஆம் கல்வியாண்டிற்கான அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலம் புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்குதல் மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிளைப்பள்ளிகளாக தரம் உயர்த்த கருத்துருக்களை உரிய படிவங்களில் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

SSA - தமிழ்நாடு COHORT 2012 புள்ளிவிவர படிவம் செயல்படுத்துதல் மற்றும் நோக்கம் குறித்த மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


Dancing RoseSSA - தமிழ்நாடு COHORT 2012 புள்ளிவிவர படிவம் செயல்படுத்துதல் மற்றும் நோக்கம் குறித்த மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


Dancing RoseDepartmental Examinations, December, 2012 - Hall Ticket


Dancing Roseபெயிலாக்கியதால் ஆத்திரம்: தலைமை ஆசிரியை சிறைபிடித்த மாணவிகள் - Dinamalar

பரீட்சையில் பெயிலாக்கியதால் கோபமடைந்த மாணவிகள், கோல்கட்டாவில் தலைமை ஆசிரியை 21 மணி நேரம் சிறைபிடித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாணவர்களின் தேர்வுத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்படும் என உறுதிமொழியாக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
கோல்கட்டாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிஷி ஆரோபிந்தோ பலிகா வித்யாலாயா பள்ளி தலைமை ஆசிரியை நேற்று மாலை 3 மணியளவில், தேர்வில் தோல்வியடைந்த 12ம் வகுப்பு மாணவிகள் 29 பேர், தலைமை ஆசிரியை ஸ்மிரிதி கோஷ் என்பவரை சிறைபிடித்தனர். ஆசிரியர்கள் ஒரு சிலர், தேர்வில் தேர்ச்சியாக்கப்படுவார்கள் என கூறினர். அந்த பள்ளியில் சுமார் தேர்வெழுதிய 105 மாணவிகளில் 76 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 29 பேர் 2 பாடங்களுக்கு மேல் பெயிலாகினர். தாங்கள் நன்றாக தேர்வெழுதிய போதும், பெயிலாக்கப்பட்டதாக மாணவிகள் கூறினர். இந்த போராட்டத்தில் மாணவிகளின் சில பெற்றோர்களும் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போதும், சமரசம் ஏற்படுத்த முடியவில்லை. நேற்று இரவு முழுவதும் நீடித்த இந்த போராட்டம், இன்று காலை 11 மணியளவில் மாநில கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பின்னர் மாணவிகளின் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Dancing Roseகல்வித்துறை செயலாளர் ஆய்வு செய்ய உள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவித Non- Teaching காலிப்பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

கல்வித்துறை செயலாளர் ஆய்வு செய்ய உள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவித Non- Teaching காலிப்பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
இதில் நேர்முக பணியாளர் காலியிடம் முதல் துப்புரவு பணியாளர் வரை அனைத்து வகை பணியாளர் விவரங்களையும் உரிய படிவங்கள் மூலம் 19.12.12 க்குள் இயகுனரகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Dancing Roseவேலை கிடைக்காத முதுகலை ஆசிரியர்கள் முற்றுகை : டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஓயவில்லை பரபரப்பு - Dinamalar

முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தினமும், 100க்கும் மேற்பட்டோர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுவதால், எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.

டி.இ.டி., தேர்வு, அதைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதிப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டதில் இருந்து, பல்வேறு பிரச்னைகளுடன், தினமும், 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுகின்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில், ஒருசில சான்றிதழ்களை கொடுக்காததால், இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள், தமிழ் வழியில் படித்து தேர்வு பெற்றும், அதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்காதவர்கள் என, பல்வேறு காரணங்களுடன், மனுக்கள் கையுமாக, பட்டதாரிகள் வருகின்றனர். இப்படி வருபவர்களை, முறையாக அழைத்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற, டி.ஆர்.பி., மறுப்பதால், அலுவலக வாசலில் திரண்டு, கோஷம் போடுவதும், பட்டதாரிகளின் வாடிக்கையாக இருக்கிறது. முதுகலை ஆசிரியர், இறுதி பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள் பலர், நேற்றும், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 


தேனியைச் சேர்ந்த அம்பிகா கூறுகையில்,""நான், வேதியியல் பட்டதாரி. தேர்வில், 110 மதிப்பெண்களை பெற்று, தேர்வு பெற்றேன். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பி.எட்., சான்றிதழை அளிக்கவில்லை. தாமதமாக கிடைத்த சான்றிதழை, டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஒப்படைத்தும், இறுதி தேர்வு பட்டியலில், எனது பெயர் சேர்க்கப்படவில்லை. கேட்டால், அதிகாரிகள், எந்த பதிலும் அளிப்பதில்லை,'' என, புலம்பினார். இதேபோல், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அரசாணையை, டி.ஆர்.பி., அமல்படுத்தவில்லை என்றும், பலர் குற்றம் சாட்டினர். இந்த ஒதுக்கீட்டின் கீழ், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழ் வழியில் படித்த பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ் வழி படித்து, அதற்கான முன்னுரிமை பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, ஆய்வு செய்து வருகிறோம். பள்ளிக்கல்வி முதல், குறிப்பிட்ட கல்விதகுதி வரை, அனைத்துப் படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஆனால், பலர், இடையில், ஏதாவது ஒரு கல்வியை, ஆங்கில வழியில் படித்தவர்களாக இருக்கின்றனர். எனவே, விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்தபின், இந்த ஒதுக்கீட்டின் கீழ் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, தனியாக அறிவிப்பு செய்யப்படும். பணியிடங்கள் அதிகம் இருப்பதால், தகுதியான விண்ணப்பதாரர்கள், கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.


Dancing Roseபட்டதாரிகள் வாழ்க்கையில் விளையாடும் டி.ஆர்.பி., 

* எந்த பாடங்கள், எந்த படிப்பிற்கு நிகரானது என, பல்வேறு கால கட்டங்களில், உயர் கல்வித்துறை, அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
* இந்த அரசாணைகள் குறித்து, டி.ஆர்.பி.,க்கே தெரியவில்லை. இதனால், தேர்வில் தேர்வு பெற்ற பட்டதாரிகள் பலர், வேலை கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
* உயர்கல்வித்துறையிடம் கேட்டு, இந்த அரசாணைகளை, இணையதளத்தில் வெளியிடவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கவில்லை.
* தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து, முந்தைய அரசு, அரசாணை வெளியிட்டது. இந்த ஒதுக்கீட்டை, டி.ஆர்.பி., சரிவர கடைபிடிப்பது இல்லை என, தேர்வர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
* டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறதா என்ற விவரங்களை, நேற்றுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.
* வேலைக்கு ஏற்ற கல்வித்தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என, அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிப்படிப்பு முதல், வேலைக்கு ஏற்ற கல்வி நிலை வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என கூறி, ஏராளமான பட்டதாரிகளுக்கு, வேலை வழங்க, டி.ஆர்.பி., மறுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


Dancing Roseமத்திய அரசு முடிவு ஏழைகளுக்கு இலவச செல்போன்

நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 40 கோடி பேருக்கு நவீன வசதிகளுடன் கூடிய இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறும் ஏழைகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மானிய தொகையை செலுத்தும் நேரடி பண பரிமாற்ற திட்டத்தை வரும் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.




இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழைகளுக்கு நவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போனை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஆதார் கார்டு அடிப்படையில் இந்த செல்போன்கள் ஏழைகளுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வங்கியில் கணக்கும் இருக்க வேண்டும். இதற்காக மக்களுக்கு உதவுமாறு மாவட்ட நிர்வாகங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 இந்த செல்போனில் 100 மணி நேரம் இலவசமாக பேசும் வசதி, 500 இலவச எஸ்எம்எஸ், இலவச இன்டர்நெட் மற்றும் குறைந்த வாடகை திட்டம் போன்ற வசதிகள் இருக்கும். மொபைல் பேங்கிங் வசதியும் செல்போனில் இருக்கும். பயனாளிகளுடன் அரசு நேரடியாக தொடர்பு கொள்ள இலவச செல்போன் திட்டம் பயன்படும் என்றும் வங்கி கணக்கில் அரசின் மானிய தொகை டெபாசிட் செய்யப்பட்டதும் பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், ரேஷனில் பொருட்கள் வாங்கியதும் அது குறித்து தகவலும் பயனாளிகளுக்கு அனுப்பப்படும். இத்திட்டத்துக்காக மத்திய அரசுக்கு ரூ.7,000 கோடி செலவாகும். இதற்கான நிதியில் 50%ஐ தொலை தொடர்புதுறையும் மீதி 50%ஐ செல்போன் சேவை நிறுவனமும் வழங்கும்.

Dancing Roseடிசம்பர் 31-க்குள் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் செயல்படத் தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ. நாராயணன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசின் சமூக நலத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறப்பு காவல் பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் தொடங்கப்பட்டு, அதற்காக ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆணையத்தை மிக விரைவில் செயல்படுத்துவதற்கான எல்லாவித முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் செயல்படத் தொடங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
Dancing Rose+2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒரு வாரத்திற்குள் தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். கடந்த ஆண்டு 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை தேர்வுகள் நடந்தது.

இந்தாண்டு பொதுத் தேர்வுகள் தொடங்குவது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி கூறியது, அரசு பொதுத் தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தேர்வு நடத்தப்படும் தேதியை விரைவில் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு முதல் தேர்வுகளின் சான்றிதழ்கள் புகைப்படத்துடன் வழங்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த மனுக்கள் அரசு தேர்வுத்துறைக்கு வந்துள்ளன. அவற்றில் உள்ள திருத்தங்கள் செய்வதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சி.டி. வடிவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தேர்வு இயக்குனர் கூறியுள்ளார். 
Dancing Roseதகவல் அறியும் உரிமைச் சட்டம் - R T I  2005..!!!

1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.




2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ? எடுத்துக்காட்டாக:

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, ( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 ) தேனாம்பேட்டை, சென்னை - 600 018 தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580 Email :sic@tn.nic.inhttp://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :- 

Shri Satyananda Mishra Chief Information Commissioner Room No.306, II Floor August Kranti Bhavan Bhikaji Cama Place New Delhi - 110 066. Phone:- 011 - 26717355 E-mail :-s.mishra@nic.inhttp://cic.gov.in/

குறிப்பு :- மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம். சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது. 


நன்றி kiliyanur
Dancing Rose"வி.ஏ.ஓ. நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்"

"வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத இறுதிக்குள் நடக்கும்,' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை வாரியாக பணி ஒதுக்கீடு பணி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே, தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில், நேற்று துவங்கியது. அப்போது, தேர்வாணைய தலைவர் நடராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: 

இளநிலை உதவியாளர்கள் பணி நியமன கலந்தாய்வு, 10 நாட்கள் வரை நடக்கும். தினமும், 300 பேர் வீதம் அழைக்கப்படுவர். "ரேங்க்" அடிப்படையில், அனைவருக்கும், பணி ஒதுக்கீடு வழங்கப்படும். வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், நவ.,30ல் வெளியானது. 

இதையடுத்து, இம்மாத இறுதியில் இருந்து, கலந்தாய்வு நடக்கும். அதன்பின், குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Dancing Rose9.5 கோடி பாடப்புத்தகம் தயாரிப்பு பணி மும்முரம்


அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்காக, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பொங்கலுக்கு முன்னதாக துவக்கி, ஏப்ரலில் முடிக்க தமிழ்நாடு பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 1 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, 3ம் பருவ பாடப் புத்தகங்கள், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜனவரி 2ம் தேதி, பள்ளிகள் திறந்ததும் வழங்குவதற்கு, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவசமாக வழங்குவதற்காக, 2.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, அடுத்த கல்வியாண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான பணியை, பாடநூல் கழகம் துவக்கி உள்ளது. 

இதுகுறித்து, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர், கோபால் கூறியதாவது: தற்போது, மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியில், தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரை, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் தேவை. 

தற்போது, 12 சதவீத புத்தகங்கள், இருப்பு இருக்கின்றன. மீதமுள்ள புத்தகங்கள் அச்சிடும் பணி, பொங்கலுக்கு முன், துவங்கும். 140 அச்சகங்களில், இந்தப் பணிகள் நடக்கும். அடுத்த ஆண்டு, ஏப்ரலில், அச்சடிப்பு பணியை முடித்து, மே மாதம், பள்ளிகளுக்கு அனுப்ப, திட்டமிட்டுள்ளோம். 

ஜூன் மாதம், பள்ளிகள் திறந்ததும், மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு, 9ம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலுக்கு வருகிறது. இதற்கு, பாட வாரியாக, "சிடி&'க்கள், வந்து கொண்டிருக்கின்றன. 

ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, ஒவ்வொரு பருவத்திற்கும், இரண்டு புத்தகங்களாக வழங்குகிறோம். 9ம் வகுப்பிற்கு, பாடத் திட்டங்கள் அதிகம் இருக்கும் என்பதால், மூன்று புத்தகங்களாக வழங்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். புத்தகங்களின் விலையில், எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு கோபால் தெரிவித்தார்.

நடப்பு கல்வியாண்டில், 6 முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 80 பக்கங்கள் கொண்ட, அட்லஸ் புத்தகங்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன. பல்வேறு தகவல் புதையல் கொண்ட இந்த புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில், தரமானதாக, பாடநூல்கழகம் உருவாக்கி உள்ளது.

நடப்பாண்டில், அட்லஸ் பெறும் மாணவ, மாணவியருக்கு, அடுத்த ஆண்டு, மீண்டும் வழங்கப்பட மாட்டாது.
அடுத்த ஆண்டில் இருந்து, 6ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும், இலவச அட்லஸ் வழங்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
தகுதி தேர்வில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எம்.பில் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

பயனற்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை காரணம் காட்டி, ஊதியம் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும். மேலும் அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண் டும்.

அரையாண்டு தேர்வு களை கடந்த ஆண்டுகளை போல் நடத்த வேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம்  நடந்த கவுன்சலிங்கில் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதாக கூறி, சில ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தற்போது அதே பணியிடங்களில் மீண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்ட இணை செயலாளர் லூயி ஜான்பிரிட்டோ, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கலைத்தங்கம், கண்ணன், ரிஷிகேசவன், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment