PALLI.IN

Image description

Get Involved!

Image description

Students from rural background also involve in creative activities in the processof learning one example is this thumb impression drawing done by student of class four,

If the teacher foster the skills of them definitely they shine like stars

Image description
Image description
Image description

Learninging together is Awesome!

We learn together in group works than by teachers lecture teachers facilitate us for learning effectively.



Image description
Image description
Image description
Image description

Participate!

We use the available materials for creating creative projects like this We use to make FA projects for all the lessons and our teachers evaluate this for improvement in our learning.

FA also helps us to face SA confidently.

Image description
Image description
Image description

Friday, December 14, 2012


animated gifs bullets 4animated gifs bullets 4டிசம்பர் 2012 மாத தொடக்க/ உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான CRC எப்போது?


  கலையும் கைவண்ணமும் என்ற தலைப்பில் 08.12.2012 அன்று நடைபெறும் என்று முன்கூட்டியே அளிக்கப்பட தோராய பட்டியலில் தெரிவிக்கப்பட்ட பயிற்சி பல்வேறு SMC/SABL பயிற்சியின் காரணமாக எப்போது நடைபெறும் என்று உறுதியான தகவல்கள் தற்போது இல்லை. விரைவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி தேதி அறிவிக்கப்பட்டவுடன் பயிற்சி தேதி நம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

animated gifs bullets 4animated gifs bullets 4புதிதாக பணி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமன ஆணை பெற்ற 7 நாட்களுக்குள் பள்ளியில் பணி ஏற்பது உட்பட 15 விதிகள் செயல்படுத்தி தொடக்கக்கல்வித்துறை உத்தரவு


animated gifs bullets 4animated gifs bullets 4புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி பணியமர்த்தப்பட்ட மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கோர இயலாது


மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக 2009 முதல் மாநில பதிவு மூப்பு படி பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மேற்காணும் தீர்பு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி இட மாறுதல் கோர மாட்டோம் என்ற நிபந்தனையை மனுதாரர்கள் ஏற்றதன் அடிப்படையில் அளிக்கப்பட்டதால், அவ்வுத்தரவின் படி 2009திற்கு பிறகு நியமிக்கப்படும்  இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டும், மாவட்டத்திற்குள்  மட்டுமே பணியிட மாறுதலும்  அளிக்கப்படுகிறது.


 தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் உள்ள TET தொடர்பான வழக்கின் காரணமாக  அவர்களுக்கு "weightage" முறைப்படி நியமிக்காமல், TET தேர்ச்சி பெற்றோரின் மாநில பதிவு மூப்புப்படியே நியமிக்கப்பட்டனர் . எனவே அவர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்ட பணி இட மறுத்தல் தற்போது பெற இயலாது.

animated gifs bullets 4animated gifs bullets 4TET நியமன உத்தரவுகளை வழங்க தடை விதிக்க மனு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு


 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர், தேர்ச்சி பெற்றனர். 

தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தகுதி மதிப்பெண்ணில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் தளர்த்தப்பட்டது. அதன்படி, ஆந்திராவில், 10 சதவீதம், ராஜஸ்தானில், ஐந்து சதவீதம், தளர்த்தப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தகுதி மதிப்பெண் தளர்வு பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல், தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது, தவறானது. 

எனவே, நியமன உத்தரவுகளை வழங்க, தடை விதிக்க வேண்டும். தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றி, பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, "முதல் பெஞ்ச்" தள்ளிவைத்தது.

"நியமனங்கள் எதுவும், ரிட் மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.

animated gifs bullets 4animated gifs bullets 4TNPSC Tentative Answer Keysanimated gifs bullets 4animated gifs bullets 4


 Sl.No.
Subject Name  
(Date of Examination:09.12.2012)
RADIO SUPERVISOR IN THE PWD IN T.N.ENGG. SUB.SERVICE
1
2
HORTICULTURAL OFFICER IN T.N. AGRICULTURAL SERVICE
1
ASST. ENGINEER (AUTOMOBILES) IN TNFRS IN T.N GEN. SERVICE
1
2
POST GRADUATE TEACHER IN T.N.HR.SEC.EDNL SERVICE
1
1
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 17th December 2012 will receive no attention.

animated gifs bullets 4animated gifs bullets 410ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம்: தேர்வுத்துறை உத்தரவு


வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்கள், பள்ளிகள் தோறும் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பள்ளிகளிடம், "சிடி" க்களாக வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவ, மாணவியரின் புகைப்படங்களுடன், அவர்கள் பிறந்த தேதி, முகவரி, பெயர், எழுதும் பாடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், "சிடி"க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும், 20 தேதிக்குள், தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், சம்பந்தபட்ட "சிடி"க்களை, பொறுப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளிகளிலும், மாணவர்கள் விவரங்கள் அடங்கிய "சிடி"க்கள் தயாராக உள்ளன. மாணவரின் பெயர், தலைப்பு எழுத்துக்களில், பெரும்பாலும் தவறுகள் வருகின்றன. 

மாணவர்கள், உயர் கல்விக்கு செல்லும் போது, பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. எனவே, மாணவர்கள் விவரங்கள் அடங்கிய படிவத்தில், மாணவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தயாராக உள்ள, "சிடி&'க்களை, தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், குறிப்பிட்ட மையங்களில் வழங்குவோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

animated gifs bullets 4animated gifs bullets 4பிளஸ் 2 தற்காலிக அட்டவணை தயார்: 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஆண்டுதோறும், மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். முந்தைய தேர்வு, மார்ச், 8ல் துவங்கி, 30 வரை நடந்தது. வரும் மார்ச்சில், பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, மும்முரமாக செய்து வருகிறது. 

தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் தர வேண்டும் என, ஏற்கனவே, தேர்வுத்துறை கூறியிருந்தது. அதன்படி, மாவட்ட வாரியாக, மாணவ, மாணவியரின் விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் பெறப்பட்டு, தற்போது, இறுதி செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதன்படி, எட்டு லட்சம் மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வை, கூடுதலாக 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 

அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், செய்முறைத் தேர்வு துவங்கி விடும். அதற்கு, இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக, செய்முறை தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, பதிவெண்கள் வழங்க வேண்டும். இதே எண்களைத் தான், எழுத்து தேர்விலும், மாணவ, மாணவியர் பயன்படுத்துவர். எனவே, ஜனவரியில், பொங்கல் பண்டிகை முடிந்ததும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பதிவெண்கள் விவரம், அந்தந்த பள்ளிகளில் அறிவிக்கப்பட உள்ளது. 

செய்முறைத் தேர்வில், நான்கு லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என, கூறப்படுகிறது. இவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை, தமிழக அரசின் பார்வைக்கு, தேர்வுத்துறை அனுப்பி உள்ளது. மார்ச் 1 அல்லது 4ல் இருந்து, தேர்வை துவக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து கேட்கப்படும். தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என, கண்டறிந்து கருத்துக்களை தெரிவிப்பர்.

அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால், திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும். அதன்பின், மீண்டும் அரசின் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வமாக, மாணவ, மாணவியருக்கு அறிவிக்கப்படும்.
மார்ச் 1ம் தேதி, வெள்ளிக்கிழமை வருவதால், இந்த தேதியில் இருந்து துவங்கும் அட்டவணை இறுதியாவதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment