MODEL QUESTIONS FOR SSLC
PALLI.IN
Monday, December 31, 2012
SSLC TIME TABLE
பத்தாம் வகுப்புக் கால அட்டவணை
27.03.2013-தமிழ் முதல் தாள்
28.03.2013-தமிழ் இரண்டாம் தாள்
01.04.2013-ஆங்கிலம் முதல் தாள்
02.04.2013-ஆங்கிலம் இரண்டாம் தாள்
05.04.2013-கணிதம்
08.04.2013-அறிவியல்
12.04.2013-சமூக அறிவியல்
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1 இல் துவங்கி 27 இல் முடிகிறது
ENGLISH TEACHER
I LIKE THIS PICTURE VERY MUCH AND I HOPE YOU TOO WILL
THIS PICTURE WILL HELP ENGLISH TEACHER TO TEACH ACTION WORDS VERBS AND TENSE
TO COPY THIS JUST RIGHT CLICK AND DO SAVE IMAGE AS SELECT A LOCATION SAVE AND TAKE A PRINT OUT OF THIS AND USE THIS PICTURES AS FLASH CARDS AND CONSTRUCT AS MANY ACTIVITIES AS YOU CAN IN YOUR CLASS
Saturday, December 29, 2012
புவியியல் பாடங்களுக்காக
நாமும் இதுபோன்றப் பயனுடைய வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து தமிழில் மொழிபெயர்த்து வகுப்பறையில் பயன்படுத்தலாம்
பெருவெடிப்பு கொள்கை
பூமியின் உள்ளடுக்குகள்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு
முக்கிய குறிப்புக்கள்:
* 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
* முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான கலந்தாய்வினை ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் நடத்தப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும்,இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.
* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.
Friday, December 28, 2012
இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பதவியுயர்வு வழங்க தேர்ந்தோர் பட்டியல் 15.03.1999, 15.03.2000 மற்றும் 15.03.2001 நாளின்படி வெளியிடப்பட்டுள்ள பட்டியல் - முன்னுரிமையினை சரிசெய்தல் விவரங்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு மற்றும் முன்னுரிமைப்பட்டியல் |
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 05.01.2013 அன்று நடைபெறும் குறுவள மைய பயிற்சியான "கலை மற்றும் கைவினைப் பொருட்கள்" பயிற்சி கையேடு |
ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு? புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
ஆசிரியர்கள் நீண்ட விடுப்பில் செல்லும் போது, அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப் பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். துவக்கப் பள்ளிகளில், ஆசிரியர்கள், மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பு போன்ற, நீண்ட கால விடுப்பில் செல்லும் போது, அப்பணியிடங்களில், வேறு பள்ளிகளிலிருந்து, மாற்று ஆசிரியர்கள் வந்து, வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், இரு பள்ளிகளிலும் முழுமையாக வகுப்புகள் நடத்த முடியாமல், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. கடந்த, 1997க்கு முன், நீண்ட கால விடுப்பு பணியிடங்களில் பணியாற்ற, தற்காலிக ஆசிரியர்கள் இருந்தனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் வகுப்புகள் நடந்தன. தற்போதும், அதுபோன்று, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறையை, அரசு மேற்கொள்ள, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அரசு பள்ளிகளில் தற்போது, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்போதே, மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டால், விடுமுறை பணியிடங்களில், வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வசதியாக இருக்கும். இதுகுறித்து, பல பள்ளிகளின் மேலாண்மைக் குழுச் சிறப்புக் கூட்டங்களில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. |
ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த செப்டம்பர், 30ல் நடந்தது; 10 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், நவம்பர், 30ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு பெற்றவர்களுக்கு, விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123, கடலூரில் 88, கிருஷ்ணகிரியில் 73, திருவள்ளூரில் 100, திருவண்ணாமலையில் 115, வேலூரில் 112, விழுப்புரத்தில் 167 பணியிடங்கள் காலியாக உள்ளன. |
பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், நேற்று முதற்கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட, மாநிலத்தின் மற்ற நகரங்களிலும், நாள்தோறும் வாகன விபத்துகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலியாகி வருகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், அப்பகுதிகளில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து, விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், கடந்தாண்டு போக்குவரத்து துறை வலியுறுத்தியது. சமீபத்தில், சென்னை பெருங்குடியில் நடந்த விபத்தில், பள்ளி, கல்லூரியை சேர்ந்த, நான்கு மாணவர்கள் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட், தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. "பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில், போதிய அளவிற்கு, பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கி, பயணம் செய்கின்றனர்" என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், நேற்று முதல் கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தி உள்ளது. இதில், "விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பதை தடுக்க, பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை மாற்றியாக வேண்டும்" என, போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். டில்லி உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில், காலை, 7:00 மணிக்கே, கல்வி நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்து விடுகின்றன. இதனால், பேருந்துகளில் நெருக்கடி இல்லாமல், மாணவர்கள் பயணிக்க முடிகிறது. இந்த முறையால், விபத்துகளும் நடப்பதில்லை. இதேபோன்று, சென்னை உள்ளிட்ட மாநகராட்சி, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தை, விரைவில் மாற்றுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், ஜனவரி முதல் வாரத்தில், மீண்டும், விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். |
பிளஸ் 2: முதல்வரின் தகுதி பரிசுத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. click here to download the Press Release இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்று தொடர்ந்து கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள் மற்றும் முதல் ஆயிரம் மாணவிகளுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் 2 படிப்பைத் தொடர்ந்து அல்லது ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மேல்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் வீதம் ஐந்தாண்டுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மாணவர்கள், 1069 மதிப்பெண்களும், மாணவிகள் 1082 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2011-12-ம் கல்வியாண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் முதல்வரின் தகுதி பரிசுத் தொகையினைப் பெற்று தொடர்ந்து புதுப்பிக்கும் மாணவர்கள், அடுத்த நிதியாண்டு முதல் (2012-2013) ரூ.3 ஆயிரம் பெறலாம். நடப்பாண்டு (2012) மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டும் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் மேல்படிப்புக்கான மதிப்பெண் பட்டியல் நகல்களுடன் தங்கள் கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு கல்லூரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Thursday, December 27, 2012
ஸ்மார்ட்டாகும் அரசுப் பள்ளிகள்!
கல்விதான் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம். உலகத்தை மாற்றுவதற்கு அதைப் பயன்படுத்தலாம்!'
- நெல்சன் மண்டேலா-
தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் சளைக்காமல் பலவகையான புதுமையான தொழில்நுட்பங்களை அரசுப் பள்ளிகளிலும் அமல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இதற்காக கல்வித் தகவல் மேலாண்மைத் திட்டம் (Educational Management Information System)என்னும் புதிய திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கார்டு (Smart Card) Gனப்படும் நவீன சிறப்பு அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
அது என்ன ஸ்மார்ட் கார்டு? நாம் செல்போனில் பயன்படுத்தும் சிம் கார்டுகளைப்போல சிறிய அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட் கார்டுகளில் எண்ணற்ற தகவல்களைப் பதிவு செய்யலாம். ஒரு மாணவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய இந்த மின்னட்டை ஒரு சிறப்பு அடையாள அட்டையாகும்.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஸ்மார்ட் கார்டு தரப்படவுள்ளது. இதில் அந்த மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, பள்ளிச் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரங்கள், மாணவர்களின் ரத்த வகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். குடும்பச் சூழ்நிலை காரணமாக அந்த மாணவர் வேறு பகுதிக்கு இடம் பெயர நேர்ந்தால், அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் சேர ஸ்மார்ட் கார்டில் இருக்கும் தகவல்களே போதுமானதாக இருக்கும். அரசின் நலத்திட்டங்களுக்குத் தகுதியான மாணவர்களைக் கண்டறியவும், இலவச மடிக் கணினித் (லேப்டாப்) திட்டம் போன்ற நலத் திட்டங்கள் மாணவர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யவும் இந்த ஸ்மார்ட் கார்டுகள் பெரிதும் உதவும்.
இந்தத் திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மொத்தம் 91,54,741 மாணவர்கள் பயனடைவர். கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் ஒரு மாணவிக்கு இந்த ஸ்மார்ட் கார்டு அட்டையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்திலுள்ள ஐந்து பள்ளிகளுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டு, திட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.
மாணவரின் உடல்நலம், மருத்துவ விவரங்கள் அடங்கிய ஹெல்த் கார்டு (Health Card), இந்த ஸ்மார்ட் கார்டுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மாணவருக்கு அவசரச் சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் இது பெரிதும் உதவும். இதுதவிர, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும், ‘எளிமையாக்கப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை’ (Simplified Activity Based Learning) எனப்படும் புதிய முறையும் தற்போது அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதியப் திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் கல்வி வசதிகளைப் பெரிதும் மேம்படுத்தும் என்பது உறுதி.
Wednesday, December 26, 2012
Subscribe to:
Posts (Atom)