ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் அரசாணை |
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான துறைத்தேர்வில் வரும் DOM (District Office Manual) எனும் தாள் இனி TNGOM (Tamil nadu Govt Office Manual) என்று பெயர் மாற்றி திருத்த அரசாணை வெளியீடு |
யாருக்கு எவ்வளவு போனஸ் ? தர ஊதியம் கொண்டு நிர்ணயிக்கப்படும் A, B, C மற்றும் D பிரிவுகள் சார்ந்த அரசாணை A Grade - தரவூதியம் ரூ.6,600 அதற்கு மேல் B Grade - தரவூதியம் ரூ.4,400 முதல் ரூ.6599 வரை C Grade - தரவூதியம் ரூ.1,400 முதல் ரூ.4,399 வரை D Grade - தரவூதியம் ரூ.1,399 அதற்கும் கீழ் |
Pongal Bonus Announced for Tamil Nadu Government employees |
தமிழ்நாடு தொழிற்கல்வி நிறுவனத்தால் அளிக்கப்பட "சான்றிதழ் படிப்புகளை" 22.07.2008 பின் பணியேற்ற டைபிஸ்ட் மற்றும் ஸ்டெனோ-டைபிஸ்ட் Grade 3 பணியிட பணியாளர்கள் உரிய காலத்தில் முடிக்க அரசாணை வெளியீடு |
பதவி உயர்வு மூலம் 513 அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு பெற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை |
தமிழர் பகுதியில் சிங்களம் கற்பிக்க ராணுவத்தினர் ஆசிரியர்களாக நியமனம்- கடும் எதிர்ப்பு தமிழர் பகுதியில் சிங்களம் கற்பிக்க ராணுவத்தினர் ஆசிரியர்களாக நியமனம்- கடும் எதிர்ப்பு வவுனியா: இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்கள மொழி கற்பிக்க ராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமிக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையின் தமிழர் பிரதேசமான வடக்கில் சிங்கள மொழியை கற்பிக்க ராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பள்ளிகளையும், ராணுவ மயமாக்கும் ஒரு நடவடிக்கையாக இது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரியா மறுத்துள்ளார். அதே நேரத்தில் கிளிநொச்சி கல்வி மாவட்டத்தில் கணிதம், அறிவியல், சிங்களம் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் ராணுவத்தினரை தேர்வு செய்து கற்பித்தல் பயிற்சி வழங்கப்பட்டது என்றும் ராணுவ தரப்பு கூறியுள்ளது. |
18ம் தேதி முதல் தகுதி தேர்வு விளையாட்டு ஆணையம் அறிவிப்பு- Dinakaran இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான (2013,14) தகுதித் தேர்வு போட்டிகள், சென்னையில் இம்மாதம் 18ம் தேதி தொடங்குகிறது. கபடி, ஹாக்கி, கால்பந்து மற்றும் வாலிபால் பயிற்சிக்கு 12 , 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு சான்றிதழ்கள், வயது மற்றும் இருப்பிடத்துக்கான அத்தாட்சி (10, +2 மதிப்பெண் சான்றிதழ்,பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை), அரசு மருத்துவமனையில் இருந்து உடல்தகுதி சான்றிதழ், ரத்த வகை மற்றும் ஹீமோகுளோபின் அளவுக்கான லேப் சான்றிதழ், 10 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், நடத்தை சான்றிதழுடன் ஜன. 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முகவரி: துணை இயக்குனர், ‘சாய்’ பயிற்சி மையம், எண் 55, நேரு ஸ்டேடிய வளாகம், சென்னை 3. மேலும் விவரங்களுக்கு: 044&25362479. |
2013 - 14 ஆம் கல்வியாண்டு முதுகலை ஆசிரியர் காலி பணியிடத்திற்கு பணிமாறுதல் மூலம் பதவியுயர்வு வழங்க உதவியாசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களில் தகுதியுள்ளவர்களின் பட்டியல் 01.01.2013ன் படி தயாரிக்க வழிகாட்டு நெறிமுறைகள் |
விமானப் படையில் சேர விரும்புவோருக்கு... பறக்கும் ஆசை பலருக்கும் இருக்கும். எனவே, விமானப் படையில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்தும், அதற்கு தயாராகும் முறைகள், தகுதிகள் குறித்தும் அறிய வேண்டும். பிரிவுகளும் அவற்றுக்கான கல்வித் தகுதிகளும் பறத்தல் பிரிவு ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன், பட்டப் படிப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிப் படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும் அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இருந்து, குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன் பி.இ/பி.டெக் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். தொழில்நுட்பப் பிரிவு ஏரோநாடிகல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/பி.டெக் முடித்தவர்கள் அல்லது இந்திய பொறியாளர் கல்வி நிறுவனத்தின், அசோசியேட் மெம்பர்ஷிப்பின் ஏ மற்றும் பி பிரிவு தேர்வுகளை எழுதியவர்கள் அல்லது ஏரோநாடிகல் சொசைட்டி ஆப் இந்தியா அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பொறியாளர் கல்வி நிறுவனத்தின் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வு ஆகியவற்றை எழுதியவர்கள். நிர்வாகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது ஏதேனும் ஒரு படிப்பில் முதுநிலைப் பட்டம் அல்லது சமமான டிப்ளமோ ஆகியவற்றைப் படித்து, குறைந்தபட்சம் 50% கூட்டு மதிப்பெண் பெற்றவர்கள். அக்கவுன்ட்ஸ் குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன் பி.காம் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.காம்/சி.ஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ போன்றவற்றில், குறைந்தபட்சம் 50% கூட்டு மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பறத்தல் பிரிவு - குறைந்தபட்சம் 19 வயதும், அதிகபட்சம் 23 வயதும் இருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவு - குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 28 வயதும் இருக்க வேண்டும். Ground Duty பிரிவு - குறைந்தபட்சம் 20 வயது, பட்டதாரிகள் (அதிகபட்சம் 23 வயது), முதுநிலைப் பட்டதாரிகள்/எல்.எல்.பி(5 வருட இன்டக்ரேட்டட் படிப்பு) (அதிகபட்சம் 25 வயது), எல்.எல்.பி (பட்டப்படிப்பிற்கு பிறகான 3 வருட படிப்பு) (அதிகபட்சம் 26 வயது), எம்.எட். பிஎச்.டி, சி.ஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ (அதிகபட்சம் 27 வயது). கமிஷன் வகைகள் நிரந்தர கமிஷன் - Superannuation வயது வரை, candidates பணிபுரிவார்கள். குறுகிய சேவை கமிஷன் - SSC Flying பிரிவுக்கான கமிஷனிங் தேதியிலிருந்து 14 வருடங்கள் மற்றும் டெக்னிக்கல் மற்றும் Ground duty பிரிவுகளுக்கு 10 வருடங்கள்(பணியிடங்கள் கிடைப்பதை பொறுத்து, 4 வருடங்கள் நீட்டிப்பு உண்டு) AFCAT Men தேர்வுக்கான தேர்ந்தெடுப்பு முறை குறிப்பிட்ட தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும். மொத்தம் 2 மணிநேரங்கள் நடக்கும் இத்தேர்வில், Verbal ability, Numerical ability, Reasoning, General awareness and Aptitude போன்ற பிரிவுகளில், ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சிபெறும் நபர்கள், டெஹ்ராடூன், மைசூர், காந்திநகர்(குஜராத்) அல்லது வாரணாசி போன்ற இடங்களிலுள்ள ஏர்போர்ஸ் தேர்வு வாரியங்களில், அடுத்தகட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வானது, கீழ்கண்ட தேர்வு முறைகளைக் கொண்டிருக்கும், நிலை I - இன்டலிஜென்ஸ் தேர்வு நிலை II - சைகலாஜிகல் டெஸ்ட், குரூப் டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு இரண்டாம் நிலைக்குப் பிறகு தேர்ச்சிபெறும் நபர்கள், அவர்களின் தகுதி மற்றும் தேர்ந்தெடுத்த பிரிவுகளின் அடிப்படையில், Branch specific test -ஐ எழுத வேண்டும். Pilot Aptitude Battery Test(PABT) for flying branch Engineering knowledge Test(EKT) for technical branch மருத்துவ சோதனை தங்களின் முதல் முயற்சியில் Pilot Aptitude Battery Test -ல் தோல்வியடைவோர் அல்லது ஏர்போர்ஸ் அகடமியில் பறத்தல் பயிற்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர், இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். AFCAT Men தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? http://careerairforce.nic.in/ Reference புத்தகங்கள் பொது ஆங்கிலம் - ஹரி பிரசாத் பொது அறிவு - லட்சுமி காந்த் ராணுவ திறனாய்வு மற்றும் பகுப்பாய்வு - பி.கே.மிட்டல் மற்றும் ஆர்.எஸ்.அகர்வால் ஆரம்பநிலை கணிதம் - ஆர்.எஸ்.அகர்வால் மேற்கூறிய எழுத்தாளர்களைத் தவிர, வேறுசில சிறந்த புத்தகங்களும் உள்ளன. தேர்வுக்கான பாடத்திட்டம் பொது விழிப்புணர்வு - 25 மதிப்பெண் பொது ஆங்கிலம் - 25 மதிப்பெண் எண்கணித திறன் - 25 மதிப்பெண் ராணுவ திறனாய்வு மற்றும் பகுப்பாய்வு - 25 மதிப்பெண் |
ஆசிரியர் தரம் ? மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.,) தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டப்படி, நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநிலங்கள் தனித்தனியாக தேர்வை நடத்துகின்றன . சி.பி.எஸ்.சி.,யும் அதன் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர்வதற்கு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை CTET நடத்துகிறது. முடிவுகள் டிச., 27ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 7 லட்சத்து 96 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இத்தேர்வில் வெறும் 4,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். குறையும் தேர்ச்சி 2011ல், முதன்முறையாக நடந்த முதல் தேர்வில், 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட மறுதேர்வில், தேர்ச்சி விகிதம் 7 சதவீதமாக குறைந்தது. தற்போது இது, வெறும் 1 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் கூட, தேர்ச்சி சதவீதம் ஒன்றைத் தாண்டவில்லை. ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம், தொடர்ந்து குறைந்து வருவது ஆசிரியர்களின் தரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இருப்பினும் தகுதித்தேர்வை வைத்து மட்டுமே, ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயித்து விட முடியாது என ஒரு தரப்பு கூறுவதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் இதிலிருந்து ஒரு கருத்து மட்டும் தெளிவாகிறது. ஆசிரியர் பயிற்சி படிப்புகளின் நிலை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது. எனவே பி.எட்., மற்றும் D.T.Ed., படிப்புகளில் மாற்றத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். |
அரசுப் பணி வேண்டுமா? தமிழ்நாட்டின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக அரசுக் காலி இடமான சப்இன்ஸ்பெக்டர் ஆப் பிஷரீஸ் பிரிவில் உள்ள 24 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தேவைகள் டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மீன்வள துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பிய வராக இருக்க வேண்டும். மும்பையிலுள்ள சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பிஷரீஸ் எஜூகேஷன் வழங்கும் பிஷரீஸ் சயின்ஸ் பிரிவு அஸோசியேட் டிப்ளமோ அல்லது இந்திய அரசு வழங்கும் இன்லேண்டு அல்லது மரைன் பிஷரீஸ் வகுப்புகளை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்று, அல்லது தமிழக அரசின் தொழில் நுட்ப கல்வி வாரியம் வழங்கும் பிஷரீஸ் டெக்னாலஜி அண்டு நேவிகேஷன் பிரிவில் டிப்ளமோவை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கு மேற்கண்ட கல்வித் தகுதியுடன் உடல் நலம் குறித்த சில சான்றுகளையும் கூடுதலாக தர வேண்டியிருக்கும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற 2 நிலை களிலான தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மற்றவை மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதற்காக ரூ.150/ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலமாக செலுத்த வேண்டும். கட்டண விலக்கு சலுகை பெறத் தகுதியானவர்கள் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தப் பணி இடங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 18.01.2013 கட்டணம் செலுத்த இறுதி நாள்: 22.01.2013 எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 10.02.2013 |
மருத்துவ துறையில் வேலை! எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் அரசுத் துறை சார்ந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு மையங்களில் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த பதவிகளான லேப் அஸிஸ்டெண்ட், ஜூனியர் ரேடியோகிராபர், அலோபதிக் பார்மஸிஸ்ட், ஸ்டாப் நர்ஸ் போன்ற காலி இடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது மும்பை மையத்தில் உள்ள இது போன்ற காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: இ.எஸ்.ஐ.சி.,யில் லேப் அஸிஸ்டெண்ட் பிரிவில் 11 இடங்களும், ஜூனியர் ரேடியோகிராபர் பிரிவில் ஒரு இடமும், அலோபதிக் பார்மஸிஸ்ட் பிரிவில் 22 இடங்களும், ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 44 இடங்களும் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேவைகள்: லேப் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், ஜூனியர் ரேடியோகிராபர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவ ராகவும், அலோபதிக் பார்மஸிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். லேப் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எல்.டி.,யில் டிப்ளமோ படிப்பும், பார்மஸிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.பார்ம்., பட்டப் படிப்பும், ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இப்பிரிவில் டிப்ளமோ படிப்புடன் கவுன்சிலில் பதிந்தும் இருக்க வேண்டும். பிற தகவல்கள்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இ.எஸ்.ஐ.சி.,யின் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி ரூ.125/ அல்லது ரூ.225 -ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதளத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 25.01.2013க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Post Box No: 8709, Andheri East, Mumbai - 400 069. ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள்: 16.01.2013 இணையதள முகவரி: www.esic.nic.in/Recruitment/ |
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான எல்.ஐ.சி. பணி இந்தியாவில் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முதன்மையானதும், அதிகளவு சந்தைப் பங்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ள எல்.ஐ.சி., எனப்படும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தைப் அறியாதவர்களே இருக்க முடியாது. உலக அளவில் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து புரிந்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தில் கிட்டத்தட்ட 25 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். இந்தியா எங்கும் கிளைகளைக் கொண்ட எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு சர்வதேச நாடுகளிலும் கிளைகள் இருப்பது மற்றொரு சிறப்பு. பல ஆண்டுகளாக கிளரிக்கல் பிரிவு காலி இடங்களில் எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் இருந்த இந்த நிறுவனத்தில் தற்போது எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான சிறப்பு பணி நியமனங் களின் மூலம் தென் மண்டலத்தில் உள்ள 84 உதவியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தேவைகள் என்னென்ன? எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவைச் சார்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். எல்.ஐ.சி., நிறுவனத்தின் கோட்ட வாரியாக இந்த காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.12.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.12.1977க்கு பின்னர் பிறந்தவராகவும், 01.12.1994க்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நிலையிலேயே எந்தக் கோட்டத்திற்கான காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கோட்டத்தை மாற்ற முடியாது. இந்தப் பதவிகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட 17.02.2013 அன்று நடத்தப்பட உள்ள 2 பிரிவுகளிலான எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். முதல் பிரிவில் அப்ஜெக்டிவ் வகையில் நியூமரிகல் எபிலிட்டி, ரீசனிங் எபிலிட்டி, பொது அறிவு, இங்கிலீஷ் லாங்வேஜ் ஆகிய பகுதிகளிலிருந்தும், 2வது பிரிவில் ஆங்கில சுருக்கி எழுதுதல், கடிதம் எழுதுதல் மற்றும் தமிழில் கட்டுரை எழுதுதல் ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் இருக்கும். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். மற்ற விபரங்கள் எல்.ஐ.சி., நிறுவன உதவியாளர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலுõர் ஆகிய மையங்களிலும், புதுச்சேரியிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை பின்வரும் இணையதளத்தில் Careers என்ற பகுதிக்கு சென்று டவுன்லோடு செய்து பெறலாம். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பத்தாம் வகுப்பு, ப்ளஸ்2, பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றுகள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்கள், ரூ.5/ ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட கவர், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள் போன்றவற்றை இணைத்து எந்தக் கோட்டத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ, அந்தக் கோட்ட அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.01.2013 இணையதள முகவரி: www.licindia.in * எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். * தேர்வில் 2 தாள்கள் உண்டு. முதல் தாள் அப்ஜக்டிவ் வகை. கணிதம், ரீசனிங், பொது அறிவு, ஆங்கிலம் ஆகியவற்றில் கேள்விகள் இடம் பெறும். * 2ம் தாளில் ஆங்கிலத்தில் சுருக்கி வரைதல், கடிதம் வரைதல் மற்றும் தமிழில் கட்டுரை எழுதுவது ஆகியவை இடம் பெறும். * தனித்தனியாக இவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். * இதில் தேர்ச்சி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். * தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலுõர் மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்படும். * எந்த கோட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த கோட்ட அலுவலகத்திற்கே விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். |
1,167 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவித்தொகை தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். |
வங்கித துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். மற்ற பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 20 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களுக்கு ஊழியர் தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கூடுதலாக 22 ஆயிரம் அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட இருப்பதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய வங்கி மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்ட நிலையில், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம் அளிப்பதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது. இதனால், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் முதல் புதிய வங்கிகள் தொடங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளன. எனவே, புதிதாக தொடங்கப்படும் வங்கிகள் மூலம் இந்த ஆண்டில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர், வங்கிகளில் வேலை பெறுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
"ஒழுக்கம் இல்லாத கல்வியறிவு சமுதாயத்திற்கு தீமை விளைவிக்கும்" ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மையை விட அதிகமான தீமையை விளைவிக்கும்" என காந்திகிராம பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசினார். காந்திகிராம பல்கலையில் 29 வது பட்டமளிப்பு விழா நடந்தது. துணைவேந்தர் ராமசாமி வரவேற்றார். பதிவாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். பட்டங்களை வழங்கி பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசியதாவது: பல்கலை பட்டம் பெறும் மாணவர்கள், சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக, புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும். பட்டப்படிப்பின் மூலமாக, வாழ்நாள் முழுவதும் பயன்தரக் கூடிய தனித்திறன்களை, அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். எளிமையை வாழ்வில் கடைபிடித்து ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். மனிதர்கள் தங்கள் தேவைகளை அதிகரித்து கொண்டே சென்றதால்தான், உலக வெப்பமயமாகுதல், ஓசோன் படலம் பாதிப்பு என்பது போன்ற, உலகை அச்சுறுத்தும் பிரச்னைகள் எழுந்துள்ளன. நாம் அவரவர் குடும்பத்திற்காக உழைக்கிறோம். இதேசமயம், நாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், நம்மால் இயன்ற அளவு சேவை செய்ய வேண்டும். அனைத்திற்கும் மேலாக, ஒழுக்கம், நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம். இவை இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மைகளை விட அதிகமாக தீமைகளை விளைவிக்கும், என்றார். |
MODEL QUESTIONS FOR SSLC
PALLI.IN
Thursday, January 10, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment