| |||||
தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 1 மற்றும் குரூப் 2 மறு தேர்வுகளுக்கான முடிவு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப் 1 மறு தேர்வும், நவம்பரில் குரூப் 2 மறு தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று நடராஜ் தெரிவித்துள்ளார். | |||||
10ம் வகுப்பு தனிதேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர், விரும்பும் பாடங்களில் மறுகூட்டல் செய்ய, ஆன்-லைன் வழியில், ஜனவரி 7,8 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: செப்டம்பர், அக்டோபர் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வர்கள், தாங்கள் விரும்பிய பாடங்களில், மறுகூட்டல் செய்ய விரும்பினால், ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில், ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். இரு தாள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாயும், ஒருதாள் கொண்ட பாடத்திற்கு, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு மற்றும் வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின், அதை பூர்த்தி செய்து, ஐ.ஓ.பி., வங்கியில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6&' என்ற பெயரில், கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. | |||||
ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம் புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2013,14ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்கள், சிறுபான்மை மொழி, இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களின் காலி பணி இடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்ப பதவி உயர்வு மூலமாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து தேர்வாளர் பட்டியல் பெற்று நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. இதற்காக உத்தேச பணியிட மதிப்பு பட்டியலை அரசின் பார்வைக்கு அனுப்புவதற்காக அந்தந்த மாவட்டங்களில் ஏற்படும் காலி பணி இடங்கள் குறித்த முழுவிவரங்களை வரும் 21ம் தேதிக்குள் தயாரித்து இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் எனவும் தவறாக இருந்தால் அதற்கான பொறுப்பை முதன்மைக் கல்வி அலுவலரே ஏற்க நேரிடும் எனவும், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட மாநகராட்சி கல்வி அலுவலர்கள் விவரங்களை சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். காலி பணி இடவிவரத்தை 1.1.2013ல் உள்ளவாறு ஆசிரியரின்றி காலியாக உள்ள பணி இட விவரம் (வயது முதிர்வு ஓய்வு நீங்கலாக) படிவம் ஒன்றிலும், 1.6.2012க்கு பின்னர் ஓய்வு பெற்று மற்றும் 31.5.2013 முடிய மறு நியமன அடிப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்கள் சார்பில் விவரம் படிவம் இரண்டிலும் தயாரித்து அனுப்ப வேண்டும் எனவும் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) இதர பட்டதாரி ஆசிரியர்கள் (பாட வாரியாக) சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் மற்றும் இதர சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு தனித்தனியாக விவரத்தை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் காலிப் பணி இடங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படை யில் அப்பள்ளியில் ஏற்கனவே பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை பாடவாரியாக கணக்கிட்டு காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணி இடங் களை எந்த பாட ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பினால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு பாடவாரியாக நிரப்பிட உரிய கருத்துருக்களை தொகுத்து அனுப்ப வேண்டும். | |||||
அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு இந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதால் அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசின் நிதி தொகை ரூ.45,969 கோடியில் இருந்து ரூ.3240 கோடியாக குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான நிதி போதிய அளவில் இருப்பதால் அத்துறைக்கான நிதி தொகையில் 7 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கல்வி துறைக்கான நிதியை அடுத்த நிதியாண்டில் 18 சதவீதம் உயர்த்தி ரூ.61,427 கோடி மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படும் எனவும், இது 22 சதவீதம் நிதி தொகை உயர்வு எனவும் சர்வ சிக்ஷா அபியான் தெரிவித்திருந்தது. தற்போது இதில் 7 சதவீதம் குறைப்பு என்பது சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு 20 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உயர்கல்வி துறைக்கான நிதியையும் 13 சதவீதம் குறைத்து ரூ.15,458 கோடியாக ஒதுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. கல்வி துறை நிதி குறைப்பு, மானிய சிலிண்டர்களை பயன்படுத்தி மதிய உணவு திட்டத்தை கையாண்டு வரும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிதி நெருக்கடி, வரும் பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சகத்தால் ஈடு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு நிதி சுமைகளை கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் நிதித் தொகை குறைப்பு உள்நாட்டு கல்வி வளங்களில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. | |||||
வாட்டியெடுக்கும் குளிரால் பள்ளிகளுக்கு ஜனவரி 14 வரை விடுமுறை தலைநகர் டில்லியில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்தபட்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலையே 9.8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டில்லியில் உள்ள 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு ஜன. 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். | |||||
மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் விற்பனை மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் தமிழகம் முழுவதும் வட்டார அலுவலகங்கள் மூலமாக பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தகங்கள் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படும். பாடநூல்களுக்கான தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி போக, மீதமுள்ளத் தொகையை பள்ளி முதல்வர்கள் அந்தந்த வட்டார அலுவலகங்களில் வரைவோலையாகச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 1 முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் பருவம் ஜனவரி 2-ம் தேதி தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பருவ புத்தக விநியோகம் தொடர்பாக டாக்டர் கே.கோபால் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மூன்றாவது பருவத்துக்கு மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் 1.40 கோடி இலவசப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 77 லட்சம் புத்தகங்கள் 22 வட்டார மையங்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. 1, 2 ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.70-க்கும், 3, 4, 5, 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.85-க்கும் விற்பனை செய்யப்படும். 7, 8ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.100-க்கும் விற்கப்படும். வட்டார மையங்களில் பள்ளிகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புத்தகங்களுக்கான விலையை மொத்தமாக வரைவோலையாகச் செலுத்தி பள்ளி முதல்வர்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களை வசதியாக எடுத்துச் செல்லும் வகையிலும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். |
MODEL QUESTIONS FOR SSLC
PALLI.IN
Saturday, January 5, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment