PALLI.IN

Image description

Get Involved!

Image description

Students from rural background also involve in creative activities in the processof learning one example is this thumb impression drawing done by student of class four,

If the teacher foster the skills of them definitely they shine like stars

Image description
Image description
Image description

Learninging together is Awesome!

We learn together in group works than by teachers lecture teachers facilitate us for learning effectively.



Image description
Image description
Image description
Image description

Participate!

We use the available materials for creating creative projects like this We use to make FA projects for all the lessons and our teachers evaluate this for improvement in our learning.

FA also helps us to face SA confidently.

Image description
Image description
Image description

Saturday, January 5, 2013

அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேதி குறித்த எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை இல்லை. குறுந்தகவல் செய்திகள் வெறும் யூகமே

அடுத்தமுறை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கும் பணியமர்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாலும் TET குறித்த எந்த செய்திக்கும் இப்போது தமிழகத்தில் அதிக முக்கியத்துவம் இருப்பதாலும், அது குறித்த யுகங்களுக்கும் வதந்திகளுக்கும் விரைவாக பரவுகின்றது. 

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

இதற்கு விடை அளிக்கும் படி கடந்த ஒரு வாரமாக குறுந்தகவல்களில் பரவி வரும் அதிகாரபூர்வமற்ற ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று.

மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள் தமிழகம் முழுவதும் உலாவருகின்றன.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

B.Ed தேர்வினை ஏப்ரல் மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக சென்றவாரம் செய்தி வெளியாகி இருந்தது.

மற்றபடி ஆசிரியர் தகுதித் தேர்வினை பற்றிய எவ்வித தேதி அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில்  விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்ற முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள் இந்த முறையும் இருக்கும் என்ற கணிப்பில்தான் இந்த தேதிகளை யாரோ உலவ விட்டிருக்கிறார்கள் .

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை பரபரப்புக்காக வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும். இத்தகைய செய்திகளின் நம்பகத்தன்மை அறியாமல் வெளியிடுவது பலரை பாதிக்கும் என்பதை உணர்வது நலம். 

இன்னும் இரண்டு TET தேர்விற்குள் வெற்றி பெறுபவர்களுக்கு பணி பெறும் வாய்ப்பு உள்ளது. அதுவரை TET குறித்த பரபரப்புகள் இருந்துக்கொண்டே இருக்கும். உணர்சிவயமோ அலட்சியமோ படாமல் அதற்குள் வெற்றிபெறுவதுதான் சமயோசிதம். அதன் பிறகு TET வெற்றிபெற்றவர்கள் குறிப்பிட்ட Rank வரை பணி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. பிறர் வெற்றி பெற்றாலும் 7 ஆண்டுகளுக்கான தகுதிச்சான்றாகவே இருக்கும்.

அனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் (Kalajathas) மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த - SSA உத்தரவு

குடும்ப அட்டைகளுக்கு ரூ.160 மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு ரொக்க 100  ரூபாய் உட்பட, 160 ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்கப்படும்  என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"தமிழர் திருநாளான  பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப  அட்டைதாரர்களுக்கு 160 ரூபாய் மதிப்பிலான சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்று  அளிக்கப்படும்.


இந்த தொகுப்பில், 20 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்பிலான  1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்காக இதர பொருட்கள் வாங்குவதற்காக  100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும்.

இந்த தொகுப்பு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

இதனால், விவசாயிகளின் துயர் துடைக்க வழி வகுப்பதோடு, பொங்கல் பண்டிகையை  தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என்று  முதல்வர் கூறியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் புதிய 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் இன்னும் 2 நாட்களில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

         மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் புதிய 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் இன்னும் 2 நாட்களில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

     இதற்கான 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என பள்ளிக்கல்வி இயக்ககக வட்டராங்கள் தெரிவிக்கின்றன. 
மேலும் இவர்களுக்கான பணி நியமன ஆணை திங்கட்கிழமைக்குள் வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆண்ட்ராய்டு மொபைலின் ஹார்ட்வேர் தன்மையை முழுமையாக அறிய

Quadrant Standard Edition
         இந்த மென்பொருள் மூலமாக உங்கள் மொபைலின் ஹார்ட்வேர் பற்றி முழுமையாக அறியலாம் மேலும் மற்ற ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.



        மேலே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

        அதில் Run Full Benchmark என்பதை கிளிக் செய்தால் சிறிது நேரம் ஆய்வு செய்து தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்திறன், மதிப்பை காட்டும்.

      System Information என்பதில் System, Device, CPU, Memory, Display, Sensors, Network Interfaces போன்றவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

        Result Browser என்பதில் தேவையான ஆண்ராய்டு போன்களின் ஹார்ட்வேர் தன்மையை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.
 
எளிய அறிவியல் சோதனைகள்: குறுவளமையங்களில் 19ம் தேதி பயிற்சி

     தமிழகத்தில் முப்பருவ பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவ மாணவியருக்கு எளிய அறிவியல் சோதனைகளும் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
        எளிய அறிவியல் சோதனைகள் தொடக்க நிலை பயிற்சி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று 6 பேர் கருத்தாளர்களாகவும், மாவட்டத்திற்கு 4 பேர் பங்கேற்பாளர்களாகக் கொண்டு 128 பேருக்கு என்று சென்னை மாநில கல்வியியல் மேலாண்மை பயிற்சி கூடத்தில் வரும் 7ம் தேதி பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
        தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைமையிடங்களில் 10ம் தேதியும், குறுவளமையங்களில் 19ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு 2ம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படும். அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், அனைத்து உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
          தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் கல்வி இணை செயல்பாடுகளில் பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் மாவட்ட அளவில் நடக்கின்ற பயிற்சியிலும், குறுவள பயிற்சியிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 
SSTA-வாரம் ஒரு உடல்நலத்தகவல் -கண்புரைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாத புதிய மருந்து
      காட்ராக்ட் (cataract) என்று அழைக்கப்படும் கண் லென்சில் புரை ஏற்பட்டு பார்வையை மறைக்கும் கண்பார்வை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமலே மருந்து மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆஸ்ட்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் சிலர் தங்கள் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.

     கால்பெயின் என்ற புரதம் உருவாகி அது நம் கண் லென்சை மறைத்து இதனால் பார்வையிழப்பு ஏற்படுவது காடராக்ட் ஆகும். இந்தப் புரதம் ஏன் உருவாகிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வயதாவதால் இது பெரும்பாலும் ஏற்படுகிறது.

இந்த கண்படல பார்வையிழப்பு நோய்க்கு தற்போது ஒரே சிகிச்சை அறுவை சிகிச்சைதான். அதாவது பாதிக்கப்பட்ட அந்த லென்சை நீக்கி விட்டு செயற்கை லென்சைப் பொறுத்துவர்.

தற்போது அடிலெய்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண் லென்சை மறைக்கும் புரதத்தில் நேரடியாக வேலை செய்யும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக கோருகின்றனர்.

கண் திசுவில் உருவாகும் கால்பெயின் என்ற புரதத்தை இந்த மருந்து குறிவைக்கும். இது முதற்கட்ட பரிசோதனைகளில் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் இது மனிதர்களில் சோதனை செய்யப்படவில்லை.

அதாவது இது மருத்துவ கவுன்சிலால் ஒத்துக் கொள்ளப்பட்டு மனிதர்களுக்கு ஆபத்தில்லாமல் காட்ராக்டை போக்கும் என்றால் சொட்டு மருந்து அல்லது கிரீம் வடிவத்தில் தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் குறிப்பிடப்பட்ட கண்ணில் இதனை அப்ளை செய்தால் போதும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

இந்த மருந்தை பயன்படுத்தி வந்தால் கண்பார்வையியல் நிபுணர்கள் மிகவும் முன் கூட்டியே உங்களுக்கு காட்ராக்ட் வருமா வராதா என்று கூறிவிடமுடியும்.

ஒரு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது இதனால் மற்றொரு கண்ணிலும் காட்ராக்ட் வரும் என்று நினைத்தால் இரண்டு கண்களிலும் இந்த மருந்தை அப்ளை செய்யலாம் இதன் மூலம் காட்ராக்ட் உருவாவதை தடுக்கவோ அல்லது அதனை தாமதப்படுத்தவோ முடியும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

10th Maths Minimum Material



Prepared By M.Lenin, GHRSS(G),MATHUR.
 
 
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் தொடங்கும் நேரத்தை காலை 7.30 மணிக்கு மாற்ற அரசு ஆலோசனை

       பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் கல்வி நிலையங்களைத் தொடங்கும் நேரத்தை மாற்றுவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
          தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தனித்தனி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், காலை நேரங்களில் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
         குறிப்பாக, தற்போதுள்ள நேரத்தை மாற்றி பள்ளிகள் காலை 7.30 மணிக்கும், கல்லூரிகள் காலை 8 மணிக்கும் தொடங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளோம். மேலும், பேருந்து விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கென தனியாக தினமும் 40 சிறப்பு பேருந்துகளும், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கென 124 பேருந்துகளும், அதிக கூட்ட நெரிசல் உள்ள நேரங்களில் 100 சிறப்பு பேருந்துகளும் தற்போது இயக்கப்படுகின்றன.
      பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தமைக்காக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மாநகரில் 4 ஆயிரத்து 415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. படிக்கட்டு பயணத்தின் ஆபத்துகளை விளக்கியும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் 192 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
      போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.
         சென்னை பெருங்குடி அருகே கடந்த டிசம்பர் 10ம் தேதி நடந்த விபத்தில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் பள்ளி நேரத்தை மாற்றுவது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
 
அரசுப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் கல்வியை மேம்படுத்த உத்தரவு

      அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகளின் கல்வியை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்த, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

         மாற்றுத் திறனாளிகளுக்கென, தனியாக கல்வி நிறுவனங்கள் செயல்பட்டாலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்ற மாணவர்களுடன் இணைந்து படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், "மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி" எனும் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
          மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பாதிப்பு நிலைக்கேற்ப ஆய்வு செய்து, அதற்கு தகுந்தவாறு அந்தந்த பாட ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.ஏ., திட்ட தலா 4 பயிற்றுநர்களுக்கு, சென்னையில் 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் மூலம் அந்தந்த மாவட்ட பயிற்றுநர்களுக்கு பயிற்சி தரப்பட்டு, பின்னர் ரெகுலர் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும்.
         சிவகங்கை எஸ்.எஸ்.ஏ.,திட்ட கூடுதல் முதன்மை கல்வி ஜெயலட்சுமி கூறுகையில், "ரெகுலர் அரசு பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தன்மையை புரிந்து, அவர்களுக்கான கல்வியை அளிக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. படித்தல்,கேட்டல், எழுதுதல், தேர்வுக்கு தயாராகுதல் என்ற அடிப்படையில் இவர்களுக்கு தனிக்கவனம் செல்லும் வகையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எங்களது திட்ட பயிற்றுநர்கள் பயிற்சி அளிப்பர்,&'&' என்றார்.
 
12th Standard Physics Study Material & Model Question Papers now available.





Prepared By Mr. Elangovan, PG Asst, Pachaiyappa's HRSS, Kachipuram.

TET மூலம் புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள சில அரசாணைகள்.

"கல்விக் கடனுக்கு நியாயமற்ற அளவுகோலை பின்பற்றக்கூடாது"

        "கல்விக் கடன் வழங்க, நியாயமற்ற அளவுகோலை வங்கி பின்பற்றக்கூடாது. இது கல்விக்கடன் வழங்கும் நோக்கத்தையே சிதைத்துவிடும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

         திருச்சியை சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனு: எனது மகன் நவீன்குமார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 388 மதிப்பெண் பெற்றார். குளத்தூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் "டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்" படிக்கிறார். நான் டிரைவர் வேலை மூலம், மாதம் 5000 ரூபாய் சம்பாதிக்கிறேன். கல்விக்கடன் கோரி, திருச்சி கே.கே.நகர் "யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா" கிளையில் விண்ணப்பித்தோம். குறைந்தபட்ச மதிப்பெண் பெறவில்லை எனக்கூறி, 2011 டிசம்பர் 9 ல் வங்கி நிர்வாகம் நிராகரித்தது. கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

         நீதிபதி எஸ்.தமிழ்வாணன்: மனுதாரர் மகன், பத்தாம் வகுப்பில் 78 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். கடன் வழங்க வங்கி, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 50 என நிர்ணயித்துள்ளது. இதன்படி பத்தாம் வகுப்பு படித்ததற்கு 15, கல்லூரி தரத்திற்கு 5 என, மொத்தம் 38 மதிப்பெண் மாணவர் பெற்றுள்ளதாக தெரிவித்து, மனுவை வங்கி நிராகரித்துள்ளது. இது சட்டவிரோதம்.

      நியாயமற்ற அளவுகோலை பின்பற்ற முடியாது. இம்மாதிரி கணக்கிடுவதால், கல்விக்கடன் வழங்கும் நோக்கத்தையே சிதைத்துவிடும். "டிப்ளமோ" படிப்பவர்களுக்கு அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 28 ஆயிரம் கோரியுள்ளார். கிளை மேலாளர் மனுவை பரிசீலித்து, அதிகபட்சம் எவ்வளவு கடன் வழங்க முடியுமோ, அதன்படி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்
 
உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்: மாணவர்களுக்கு ரூ.26 லட்சம் வழங்கல்

"உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

     மத்திய அரசு, பல்வேறு திட்டங்களின் கீழ் கோடிக்கணக்கான ரூபாயை மான்யமாக வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கும் மான்யம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில் "உங்கள் பணம் உங்கள் கையில் &' என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம், நாடு முழுவதும், 20 மாவட்டங்களில், ஜனவரி 1ம் தேதி முதல், அமலுக்கு வந்தது. இதில், புதுச்சேரியும், ஒரு மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

    இதன்படி, மத்திய அரசின், 15 திட்டங்களுக்கான மான்யம், புதுச்சேரியில் உள்ள பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆதார் கார்டு வந்து சேராதது, பாங்க் கணக்கு துவக்காதது போன்ற காரணங்களால், இரண்டு திட்டங்களுக்கு மட்டுமே நேரடி மான்யம் வழங்கும் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

      இரண்டு திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு, பாங்க் பாஸ் புத்தகம் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் மேட்டுப்பாளையத்திலுள்ள இந்தியன் பாங்க் கிளையில் நடந்தது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், உயர் கல்விக்கான உதவித் தொகை பெறும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, பாங்க் பாஸ் புத்தகத்தை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். 

       முதல்வர் ரங்கசாமி கூறும்போது, "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ், மத்திய அரசின், 2 திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு, 26 லட்சம் ரூபாய், உயர்கல்விக்கான உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்கள் மட்டும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்களின் கீழ் மான்யத்தை நேரடியாக வழங்குவது, 10 நாட்களில் அமல்படுத்தப்படும்" என்றார்.
 
தமிழ் பயிற்று மொழி மாநில மாநாடு

          தமிழ் பயிற்று மொழி மாநில மாநாடு, வேலூரில் பிப்ரவரியில் நடக்க உள்ளதாக, தமிழாசிரியர் கழக மாநில தலைவர் ஆறுமுகம் கூறினார்.

      அவர் கூறியதாவது: தமிழுக்கும், தமிழாசிரியர் கழகத்திற்கும் உழைத்த டாக்டர் மு.வரதராஜனாரின் நூற்றாண்டு விழா, தமிழாசிரியர் கழகத்தின் 71வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்குதலை உள்ளடக்கிய மாநில மாநாடு, வேலூரில் பிப்ரவரியில் நடக்கிறது. சிறப்பு ஆய்வரங்கம், கருத்தரங்கங்கள் நடக்கின்றன.

          பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கிராம பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வரும், அரசின் முடிவை கை விட வேண்டும். தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டம், என்பது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்படும்,என்றார்.
 
சிறுபான்மை மொழி (உருது, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம்) உள்ள பள்ளிகளுக்கும் அம்மொழிகளில் புதிய பாட திட்டத்தின்படி எளிய செயல் வழிக் கற்றல் அட்டைகளை வழங்க விவரம் கோரி ssa உத்தரவு

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் எளிய செயல் வழிக்கற்றல் அட்டைகளை வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

தகவல் அறியும் உரிமைச்சட்டம் - புதிய பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து தகவல் ஆணையத்திடம் தொடரப்பட்ட மேல்முறையீடு விசாரணை 10.03.2012 அன்று நடைபெறுவதால் மனுதாரர் & தொடக்கக் கல்வி பொதுத்தகவல் அலுவலர் பங்கேற்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு

No comments:

Post a Comment