PALLI.IN

Image description

Get Involved!

Image description

Students from rural background also involve in creative activities in the processof learning one example is this thumb impression drawing done by student of class four,

If the teacher foster the skills of them definitely they shine like stars

Image description
Image description
Image description

Learninging together is Awesome!

We learn together in group works than by teachers lecture teachers facilitate us for learning effectively.



Image description
Image description
Image description
Image description

Participate!

We use the available materials for creating creative projects like this We use to make FA projects for all the lessons and our teachers evaluate this for improvement in our learning.

FA also helps us to face SA confidently.

Image description
Image description
Image description

Tuesday, October 30, 2012




1.தீபாவளி 2012 பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு இறை வணக்கத்தின் பொது விளக்குதல் மற்றும் பிரச்சாரம் செய்தல் குறித்த பள்ளிகல்விக்கான தீயணைப்புத் துறையின் செயல்முறைகள்



புயல் அபாயம் : 14 மாவட்டங்களில் நாளை (31.10.20120 பள்ளிகள் விடுமுறை

பலத்த மழை மற்றும் புயல் அபாயம் காரணமாக தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை - பள்ளி 
கரூர் - பள்ளி  
 வேலூர் -பள்ளி, கல்லூரிகள்                                        
சென்னை - பள்ளி, கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகள்
திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகள்

தஞ்சை - பள்ளி, கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளி, கல்லூரிகள்

கடலூர் - பள்ளி, கல்லூரிகள்

நாகை - பள்ளிகள், 
கல்லூரிகள்
அரியலூர் - பள்ளிகள்  

விழுப்புரம் - பள்ளிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் 


புதுவையில் கல்லூரிகளுக்கு 31.10.12 விடுமுறை


பலத்த மழையால் புதுச்சேரியிலுள்ள கல்லூரிகளுக்கு 31.10.12 விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில உயர்கல்வித்துறை இயக்குனர் பன்னீர்செல்வம் இதனையை அறிவித்தார்.

2nd MID TERM TIME TABLE FOR IX TO XII STD


முதல் தாளில் தேறியவர்கள் பணி நியமனம்-

      ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

  இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும்.

  வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன், வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.

இனி 9, 10ம் வகுப்புகளும் கட்டாய கல்வி சட்டத்தில்!

  இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், 9, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

  கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், நாடு முழுவதும், 2010ல், அமலுக்கு வந்தது. இதன்படி, 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

 மேலும், எட்டாம் வகுப்பு வரை, மாணவ, மாணவியரை தோல்வி அடைய செய்யக்கூடாது; அனைவரையும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு முக்கிய அம்சங்கள், அச்சட்டத்தில் உள்ளன.

தமிழகத்திலும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலில் இருக்கிறது.இந்நிலையில், ஒன்பது, 10ம் வகுப்பையும், இந்த சட்டத்தில் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்து விரிவாக ஆலோசித்து, வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், தனி குழுவையும் அமைத்துள்ளது. இக்குழு, வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின், 60வது கூட்டம், நவ., 1ம் தேதி, டில்லியில் நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் கீதா புக்கல் தலைமையிலான குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடு, தற்போதைய நிலை, புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், இந்த சட்டத்தை, ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தும் திட்டமும், நிகழ்ச்சி குறிப்பில் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு முறை உள்ளது. இதனால், 10ம் வகுப்பிற்கு, இந்த சட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகின்றனர் என, தெரியவில்லை. மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை, அப்படியே, தமிழக அரசு ஏற்குமா எனவும் தெரியவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வராது. வரைவு அறிக்கை மீது, பல கட்டங்களில் விவாதம், ஆய்வு நடக்கும். அதன்பின், இறுதி அறிக்கையை தயாரித்து, மாநில அரசுகளுக்கு வழங்கும். அதன்மீது, முதல்வர் ஆய்வு நடத்தி, இறுதி முடிவை எடுப்பார். அடுத்த கல்வியாண்டில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.நமது மாநிலத்தில், 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு திட்டம் இருப்பதால், பொறுமையாக ஆய்வு செய்த பிறகே, முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

என்னென்ன கிடைக்கும்? இந்த சட்டம், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கும் வரும்போது, கல்விக் கட்டணம் ரத்து, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச நோட்டுகள், மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை, இலவச மதிய உணவு, இலவச சைக்கிள் என, பல்வேறு திட்டங்கள், மாணவ, மாணவியருக்கு கிடைக்கும்.

அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்


அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
பெரும்பாலான பள்ளிகளில், 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகின்றது.
குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கீழ்நிலைக்கு சென்று விடுகிறது. இவற்றை தவிர்த்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பொருட்டு, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, தமிழக அரசு 1: 30 விகிதாச்சாரப்படி மாணவர்களை நியமிக்க, திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அரசு பள்ளிகளில், தற்போது பணியாற்றும் முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை; 1:30 விகிதாச்சாரப்படி பள்ளிகளில் தேவைப்படும் ஆசிரியர்கள் விபரம்; ஒவ்வொரு பள்ளிகளிலும்,காலியாக உள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில், 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, பிரிவு வாரியாக தேவைப்படும் ஆசிரியர்கள் விபரங்களை, அரசு சேகரிக்கிறது. 2013 ஜூன்- முதல்,இந்த விகிதப்படி ஆசிரியர்கள் பணியாற்றுவர்" என்றார்.
GROUP 2 EXAM HALL TICKETS NOW AVAIL - EXAM DATE - 04.11.12 - CLICK & DOWNLOAD

GROUP 2 Re-EXAM HALL TICKET


Application No *:

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் 01.01.2012 முதல் புதிய ஊதிய நிர்ணயப் பட்டியல்

No comments:

Post a Comment